தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் பூலாம்பட்டியில் விரைவில் காய்கறி சந்தை - தொழிலதிபர் பிரகதீஷ் குமார் தகவல்! - காய்கறி விலை

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பட்டியில் தினசரி காய்கறி சந்தை அமைக்கப்படும் என தொழிலதிபர் பிரகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

perambalur
பெரம்பலூர்

By

Published : Aug 3, 2023, 1:36 PM IST

பெரம்பலூர் பூலாம்பட்டியில் விரைவில் காய்கறி சந்தை

பெரம்பலூர்: பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் டத்தோ பிரகதீஷ் குமார், இவர் சிறுவயதிலிருந்து விவசாய தொழில் ஈடுபட்டு வந்தவர். மலேசியா நாட்டிற்குச் சென்று மிகவும் சிரமப்பட்ட நிலையில் தொடர்ந்து முயற்சி செய்து சொந்த உழைப்பால் மலேசியாவில் டத்தோ பட்டம் பெற்றவர். தொழில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார ரீதியாக குறிப்பிட்ட நிலை அடைந்தவர். அத்துடன், பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசின் சிறப்புத் திட்டமான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இவர் சொந்த ஊரான பூலாம்பாடி கிராமத்திற்குத் தனது சொந்த நிதியாக 30 கோடியை ஒதுக்கி உள்ளார். அதில் இதுவரை 13 கோடியை பூலாம்பாடி பேரூராட்சிக்கு வழங்கியுள்ளார்.

விவசாயிகளை மேம்பாடு அடையச் செய்யும் வகையில், காய்கறிகளை உற்பத்தி செய்து, பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் பயனடையும் வகையில், காய்கறியைச் சந்தைப்படுத்தும் வகையில், பூலாம்பாடியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத்துறை, ஒத்துழைப்போடு பிரம்மாண்ட காய்கறி மார்க்கெட் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக விவசாயிகளை அழைத்து, நேற்று (ஆகஸ்ட் 02) கலந்துரையாடல் கூட்டம் ஒன்றைத் திரெளபதி அம்மன் கோயிலில் வைத்து நடத்தப்பட்டது. இதில் வேளாண் துறை தோழர்கள், விதை தயாரிப்பாளர்கள், வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கு பெற்றனர். இந்த கூட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகதீஸ்குமார் தலைமை தாங்கினார்.

மேலும், இக்கூட்டத்தில் பூலாம்பாடி, லத்துவாடி, பெரியம்மா பாளையம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் விவசாயிகள் பயிர்களுக்கு போதுமான விலை குறித்தும், தரமான காய்கறி விதைகள், இயற்கை விவசாயம் செய்வது குறித்து தங்களது சந்தேகங்களைக் கேட்டனர். இதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் எடுத்துரைத்து விளக்கம் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தொழிலதிபர் பிரகதீஷ் குமார் கூறுகையில், “தற்போது ஐந்து ஏக்கர் பரப்பளவில் காய்கறி சந்தை பூலாம்பாடியில் அமைக்கப் பட உள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் குளிர்சாதன வசதியுடன் பாதுகாக்கும் குடேன், விரைவில் கட்டப்படும் என்றும், மார்க்கெட்டில் சந்தைப்படுத்தல் செய்யும் போது, விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கும் என்றார். மேலும் காய்கறிகளை நல்ல விலைக்கு எடுத்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளதால் காய்கறி தேவை அதிகமாக இருக்கும். அதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:மனைவியை பிரியும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. முடிவுக்கு வந்த 18 வருட திருமண வாழ்க்கை!

ABOUT THE AUTHOR

...view details