பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தனது சொந்த கிராமத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ரூ 2 கோடி நிதி வழங்கிய மலேசிய தொழிலதிபர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தைச் சார்ந்த பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. பூலாம்பாடி கடம்பூர், புதூர், அரசடிகாடு, மேலகுணங்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியள்ளது. பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 10ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய் ஆகிய அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் உள்ளது. இதனையடுத்து பூலாம்பாடியை சேர்ந்த மலேசியநாட்டு தொழிலதிபர் பிரகதீஸ்குமார் பூலாம்பாடி பேரூராட்சியின் அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெறும் வகையில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டு, இதில் டத்தோ பிரகதீஸ்குமாரின் ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் ரூ.13 கோடி பங்களிப்பு தொகையைத் தர உறுதியளித்துள்ளார்.
இதற்காக முதற்கட்டமாக பிரகதீஸ்குமார் முதல்தவனையான தொகையாக அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் ரூ.90 லட்சமும், இரண்டாவது கட்டமாக 74 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயும் வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று மூன்றாவது கட்ட தொகையாக 26 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்காண டிடியை பேரூராட்சி செயலாளர்கள் சிவராமனிடம் வழங்கினார்.