தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் - சிங்கப்பூர்.. தனிநபர் முயற்சியால் ஏற்றுமதியாகும் காய்கறிகள்! - datuk pragadheesh kumar

மலேசிய தொழிலதிபர் அவருடைய கிரமத்தை மேம்படுத்தும் வகையில் அங்கு விளையும் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறார்.

சொந்த கிராமத்தில் விளையும் காய்கறிகளை ஏற்றுமதி செய்ய நிர்ணயம்
தனிநபரின் முயற்சியால் முன்னேறும் கிராமம்

By

Published : Jul 29, 2023, 9:59 PM IST

பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் டத்தோ பிரகதீஸ் குமார். மலேசிய தொழிலதிபரான இவர் தனது சொந்த நிதியில் இருந்து பூலாம்பாடி பேரூரை தன்னிறைவு பெற்ற ஊராக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். இங்கு சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், சிறு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

தன்னுடைய சொந்த கிராம மக்கள் பயன் அடையும் வகையில் பால்பண்ணை, நூலகம் மற்றும் பள்ளி மாணவர்கள் படிக்க நிதியுதவி போன்ற நலத்திட்டங்களை பிரகதீஸ் குமார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தன்னுடைய சொந்த ஊர் விவசாயிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்காக டத்தோ பிரகதீஸ்குமார் மற்றொரு முயற்சியை எடுத்து வருகிறார்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு, ஊரின் வளர்ச்சிக்கு வருவாயும் கிடைக்கும் என்பதால் தன்னுடைய சொந்த செலவில் பூலாம்பாடி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளார்.

இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் டத்தோ பிரகதீஸ் குமார் தலைமையில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது. பெரம்பலூர் மற்றும் சேலம் தோட்டக்கலை துறை அதிகாரிகளை கொண்டு காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க:கிருஷ்ணகிரி வெடி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!

அப்போது டத்தோ பிரகதீஸ் குமார் கூறுகையில், முதற்கட்டமாக காய்கறிகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தொடக்கமாக பூலாம்பாடி கிராமத்தில் காய்கறி மார்கெட் அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு 10 டன் காய்கறிகள் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் பூலாம்பாடி பகுதியில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன என்றார்.

இதனிடையே தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தை போன்று பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் மிகப் பெரிய அளவில் காய்கறி மார்கெட் அமைக்கப்பட உள்ளதாக கூறினார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரப்படும் என டத்தோ பிரகதீஸ் குமார் தெரிவித்தார்.

ஐந்து ஆண்டு காலங்களில் பணிகள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். இந்நிலையில் பூலாம்பாடியில் அக்டோபர் 25 ஆம் தேதி காய்கறி மார்கெட் திறக்கப்படும் எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில் தனி மனிதரின் சீரிய முயற்சியால் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கிய விருதான “டத்தோ” விருதை பிரகதீஸ் குமார் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தீபாவளிக்கு தயாராகும் ஆவின் பலகாரங்கள்... அமைச்சர் தந்த தகவல்..

ABOUT THE AUTHOR

...view details