பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சித்தளி கிராமத்தில் இன்று காலை தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக வந்து அங்கு பள்ளிக்குச் செல்வதற்காக நின்று கொண்டிருந்த மாணவர்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த காயத்திரி, சரண்யா, அகல்யா, செந்தாமரை, ராதிகா, கோமதி ஆகியோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிகிச்சைப் பெற்று வந்த காயத்ரி என்ற மாணவியின் நிலை மிகவும் அபாயகட்டத்தில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.