பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர் இருசக்கர வாகன ஷோ ரூமில் மேலாளராக பணிபுரிகிறார்.
இவரது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 5 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாய் பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.