பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த செபஸ்தியார் என்பவரின் மகன் ரெக்ஸ்ரேவன் இன்று மாலை அதே பகுதியில் உள்ள எலிசா என்பவரது வயலுக்கு சென்றுள்ளார்.
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு! - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காடு கிராமத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!
இதனிடையே வயலில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து விழுந்து வரப்பில் கிடந்துள்ளதை ரெக்ஸ்ரேவன் கவனிக்காமல் அதன் மீது கால் வைத்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இறந்த சிறுவனின் உடல் உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரும்பாவூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.