பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் கல் குவாரி உள்ளது. அங்கு எளம்பலூர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி, தினேஷ் இருவரும் வேலை செய்து வந்தனர்.
கல் குவாரியில் குண்டு வெடித்து ஒருவர் பலி ! - பலி
பெரம்பலூர்: கல் குவாரியில் வெடி வைத்தபோது பாறை வெடித்து சிதறியதால் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல் குவாரியில் குண்டு வெடித்து ஒருவர் பலி !
பாறைக்கு வெடி வைத்ததில் சிதறிய பாறைகள் அவர்கள் மேல் விழுந்ததில் வீராசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார், தினேஷ் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.