பெரம்பலூர் நகரப்புற பகுதியான அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் நகர இளைஞரணிச் செயலாளராக உள்ளார். இதனிடையே, பிரேம்குமார் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
இன்று காலை வீட்டிற்கு வெளியே பிரேம்குமாரின் தாய் வந்து பார்த்தபொழுது இரு சக்கர வாகனம் முற்றிலும் தீ வைத்து கொழுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சில நபர்கள், பிரேம் குமாருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.