பெரம்பலூர் சிறுவாச்சூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பட்டதாரி கூட்டமைப்பு சார்பாக அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"பஞ்சமி நில விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மூலப் பத்திரத்தை தாக்கல் செய்து விட்டால், தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பஞ்சமி நிலமாக இருந்து மாற்றப்பட்டதாக இருந்தால் திமுகவுக்கு, முரசொலி அலுவலக நிலம் உரிமை இல்லை.
முரசொலி அலுவலக நிலத்தை தமிழ்நாடு அரசிடம் திருப்பிக் கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க பாஜக தயார்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பஞ்சமி நிலம் விவகாரம்: உதயநிதி ஸ்டாலினிக்கு அழைப்பாணை