பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகம் முன்பு அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாகப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுஜித் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
’புதிய ஓய்வூதியத்தைக் கைவிட வேண்டும்’ - வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Bank staffs protest in perambalur
பெரம்பலூர்: வங்கி ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடித்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Bank staffs protest in perambalur
வங்கி ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடித்தல், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், வாரத்தில் 5 நாள்கள் வேலை, அலுவலர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் வாராக்கடனை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதையும் படிங்க:பாரம்பரிய தேசிய நெல் திருவிழா: மே மாதம் நடைபெறும் என அறிவிப்பு!