தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் பலத்த காற்று: வாழை மரங்கள் நாசம்! - பெரம்பலூரில் பலத்த காற்று: வாழை மரங்கள் சேதம்

பெரம்பலூர்: வேப்பந்தட்டை சுற்று வட்டார கிராமங்களில் நேற்றிரவு பலத்தக் காற்று வீசியதில், 400 மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்து நாசமாகின.

பெரம்பலூரில் பலத்த காற்று: வாழை மரங்கள் சேதம்!

By

Published : May 31, 2019, 5:30 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மாத காலமாக அக்னி வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், வேப்பந்தட்டை சுற்று வட்டார கிராமங்களில் நேற்று இரவு பயங்கர சூறாவளிக் காற்று வீசியது. இதில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வாழைத்தாருடன் கீழே விழுந்தது. இதன் மதிப்பு நான்கு லட்சம் ஆகும். இதனால் நாசமடைந்த வாழை மரங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரம்பலூரில் பலத்த காற்று: வாழை மரங்கள் சேதம்!

ABOUT THE AUTHOR

...view details