பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் - அய்யலூர் சாலையில் மாலை 5 மணி அளவில் முட்புதர் ஒன்றில் சாக்கு மூட்டை கிடந்தது. அந்த சாக்கு மூட்டையில் இருந்து குழந்தை அழும் சத்தம் வரவே அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் சாக்கு மூட்டையைப் பிரித்து பார்த்தபோது அதில் பிறந்த சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்தது.
புதருக்குள் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை - மீட்கப்பட்ட உடனடி சிகிச்சை! - பெரம்பலூர் அருகே புதருக்குள் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை
பெரம்பலூர்: பிறந்த சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று முட்புதரில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

புதருக்குள் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை...
புதருக்குள் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இதுகுறித்து உடனடியாக அவசர ஊர்தி 108க்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்பு அந்த குழந்தை மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.