பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராடினார்கள்.
பெரம்பலூரில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் போராட்டம் - வேலை முறைகேடு
பெரம்பலூர்: நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி ஊழியர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுனர்.
பெரம்பலூரில் 100நாள் வேலை திட்ட ஊழியர்கள் போராட்டம்
முறைகேடு குறித்து ஊழியர்கள் கூறியதாவது, கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வேலை தருவது இல்லை, மேலும் ஜேசிபி இயந்திரங்களை வைத்து வேலை முடித்துவிட்டு, ஆட்கள் வேலை செய்ததைப்போல கணக்கு காட்டி, ஊதியம் தருவதில் முறைகேடு செய்துவருகின்றனர். என ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.