பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் அருள்மிகு ஆதிசிவன் திருக்கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலை புனரமைக்கும் பணிக்கு வாஸ்து பூஜை இன்று (அக்.27) தொடங்கியது.
பெரம்பலூர் அருகே பழங்கால சிலைகள் கண்டெடுப்பு! - Perambalur District News
பெரம்பலூர் அருகே 200 ஆண்டுகள் பழமையான முற்றுப்பெறாத தட்சிணாமூர்த்தி மற்றும் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், புனரமைக்கும் பணிகளுக்காக தோண்டிய போது சுமார் 200 ஆண்டுகள் பழமையான முற்றுப்பெறாத தட்சிணாமூர்த்தி சிலை மற்றும் சிதிலமடைந்த அம்மன் சிலை என இரண்டு சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருக்கோயில் புனரமைக்கும் பணியின் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:காந்தி வேடமிட்டு விமான நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு