தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி: ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அதிமுகவினர் மரியாதை! - ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் மரியாதை

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

late former Chief Minister Jayalalithaa
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

By

Published : Dec 5, 2020, 5:24 PM IST

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள் ஆங்காங்கே அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்பட அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சேலம் மாநகரில் உள்ள அண்ணா பூங்கா வளாகத்தில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு சேலம் மாவட்ட அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சேலம் மாவட்ட அதிமுகவினர்

தருமபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம் என ஜெயலலிதாவின் படத்திற்கு முன்பு கை நீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தருமபுரி அதிமுகவினர்

இதையும் படிங்க: சட்டத்தை கொண்டுவந்தவர் ஏழைத்தாயின் மகன்... ஆதரித்தவர் விவசாயி என தம்பட்டம் அடிப்பவர்.. !

ABOUT THE AUTHOR

...view details