பெரம்பலூர் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
குன்னம் வட்டம் வெள்ளாறு, வேப்பந்தட்டை வட்டம் கல்லாறு ஆகிய இடங்களில் மாட்டு வண்டிக்குத் தனியாக மணல் குவாரி அமைக்கக் கோரியும்; அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் அனுமதி உத்தரவு வழங்கக் கோரியும், மாட்டு வண்டித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.