உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறையின் ஆலோசனை குழு கூட்டம்! - 27.23 கிலோ குட்கா பான் மசாலா பொருட்கள் பறிமுதல்
பெரம்பலூர்: உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறையின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூரில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் ஆலோசனை குழு கூட்டம்
உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறையில் ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (செப்.8) நடைபெற்றது.
அப்போது, கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக அனைத்து உணவு வணிக நிறுவனங்களிலும் தகுந்த இடைவெளி கடைபிடித்தல், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் உணவு வணிக நிறுவனங்கள் தினமும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து விவரிக்கப்பட்டது.
மேலும் உணவு பொருள்கள் கலப்படம், தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் மாவட்ட நியமன அலுவலர் தொலைபேசி எண் 04328 224033 என்ற எண்ணிலும்94440 42322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் சௌமியா சுந்தரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.