தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட அதிமுகச் செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பிறந்தநாள் விழா - 103rd birthday of Dr. Mgr birthday
பெரம்பலூர்: முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூரில் அதிமுக சார்பில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
mgr
தொடர்ந்து தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திர காசி, மருதை ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆருக்கும் பிரபாகரனுக்குமிடையே காவிய நட்பு - பழ. நெடுமாறன் நெகிழ்ச்சி