தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர், குன்னம் அதிமுக வேட்பாளர்கள் வாக்களிப்பு - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021

பெரம்பலூர்: பெரம்பலூர், குன்னம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வாக்கினைப் பதிவுசெய்தனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

By

Published : Apr 6, 2021, 3:24 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 816 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் தமிழ்ச்செல்வன் தனது சொந்த ஊரான எளம்பலூர் அரசுப் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.

பெரம்பலூரில் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

அதேபோல் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் தனது சொந்த ஊரான அரனாரை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்

அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரபாகரன் பெரம்பலூர் நகரப் பகுதிக்குள்பட்ட ரோவர் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details