ஏப்ரல் 18 நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில்ஈடுபட்டுவருகிறது.
அதிமுக வேட்பாளர் சிவபதி பெரம்பலூரில் தேர்தல் பரப்புரை - அதிமுக வேட்பாளர் சிவபதி
பெரம்பலூர்: ஆலத்தூர் ஒன்றியம் பகுதிகளில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி பரப்புரை மேற்கொண்டார்.

அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி
அந்த வகையில், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்.ஆர்.சிவபதி, ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் செட்டிகுளம், தேனூர், கண்ணப்பாடி மாவிலங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரைகளில் ஈடுபட்டார்.
இதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, பாரதிய ஜனதா கட்சி கோட்டப் பொறுப்பாளர் சிவசிப்பிரமணியன், தேமுதிக மாவட்டச் செயலாளர் துரை காமராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.