இந்திய அஞ்சல் துறையின் புதிய திட்டமான ஆதார் எண் கொண்டு அஞ்சலகத்தில் பணம் பெரும் திட்டத்தை பெரம்பலூர் தலைமை அஞ்சலகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை திருச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா தொடங்கிவைத்தார்.
அஞ்சலகத்தில் ஆதார் எண் மூலம் பணம் பெறும் புதிய திட்டம்...! - Aadhaar number, withdraw money, postoffice, india post, new scheme introduce, perambalur
பெரம்பலூர்: ஆதார் எண்ணைக் கொண்டு அஞ்சலகத்தில் பணம் பெரும் புதிய திட்டத்தை பெரம்பலூர் மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
postoffice-new-scheme
பின்னர் அவர் பேசுகையில், இத்திட்டம் இந்திய முழுவதும் செயல்படவுள்ளது எனவும் இதன்மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக ஆதார் எண் கொண்டு பணம் பெறலாம் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆதார் எண் மூலம் பணம் எடுக்கும் முறை குறித்து வாடிக்கையாளர்களுக்கு அஞ்சலக அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் இந்நிகழ்வில் அஞ்சலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.