தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது குழந்தை பலி! - அங்கன்வாடி கட்டட பணி

பெரம்பலூரில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் 3 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 28, 2022, 10:58 PM IST

பெரம்பலூர்:வேப்பந்தட்டை வட்டம் மாவிலங்கை கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பணி நடைபெறுவதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. அக்குழியில் 5 அடி ஆழத்திற்கு ஊற்று நீர் இருந்து வருகிறது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவருடைய 3 வயது மகன் ரோகித் சர்மா தனது பாட்டியுடன் ரேஷன் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பினான்.

அப்போது, அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கன்வாடி கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட குழியை மூட வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:விழுப்புரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details