தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இவ்வளவு நாள் உன்ன விட்டு வச்சதே உன் நல்ல நேரம்' - போதையில் அடாவடி செய்த இருவர் - perambalur crime news

பெரம்பலூர்: ஏரிக்கரைக்கு பூஜை செய்ய வந்தவரை, மதுபோதையில் இருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

a person attacked by two persons
a person attacked by two persons

By

Published : May 9, 2020, 7:18 PM IST

ஊரடங்கால் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், எந்தக் கோயிலிலும் நேற்று சித்ரா பௌணர்மி பூஜை நடைபெறவில்லை. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர், அக்கிராமத்திலுள்ள ஏரிக்கரையில் பூஜை செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதன்படி பூஜைக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு, ஏரிக்கரைக்கு வந்துள்ளார். கதிரேசன் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, மதுபோதையில் அங்கு வந்த இருவர், அவரிடம் சாதாரணமாக விசாரித்தனர். அதற்கு அவர் மக்களை அழைத்து பூஜை செய்யப்போவதாகத் தெரிவித்தார்.

சரமாரியாக தாக்கும் இருவர்

பேசிக்கொண்டிருக்கும்போதே தகாத வார்த்தைகளால் கதிரேசனை திட்டி, இருவரும் சரமாரியாக தாக்கினர். காலில் அணிந்திருந்த செருப்பைக் கொண்டு அடித்தும், காலால் மிதித்தும் தாக்கினர். இதனைக் கண்ட அங்கிருந்த சிலர் ஓடிவந்து, அந்த நபர்களிடமிருந்து கதிரேசனை காப்பாற்றினர்.

இச்சம்பவத்தை அருகிலிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். வேகமாகப் பரவிய இந்த வீடியோ காவல் துறையினரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவிட்-19: விடை கிடைக்காத ஏராளமான வினாக்கள்! பதில் தேடும் சிறப்புத் தொகுப்பு...

ABOUT THE AUTHOR

...view details