பெரம்பலூர் மாவட்டத்தில், குன்னம், லப்பைகுடிகாடு ஆடுதுறை, அகரம்சிகூர் உள்ளிட்ட வெள்ளாற்றுக் கரையோர பகுதிகளில் அடிக்கடி மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், லப்பைகுடிகாடு பகுதி அருகே மணல் திருட்டு நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பெரம்பலூரில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது! - மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டி பறிமுதல்
பெரம்பலூர்: மணல் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்திய மாட்டு வண்டியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
![பெரம்பலூரில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது! a person arrested for sand theft in Perambalur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:22:53:1596275573-tn-pbl-02-sand-theft-script-image-7205953-01082020113915-0108f-00490-967.jpg)
a person arrested for sand theft in Perambalur
இதைடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மங்கலமேடு காவல்துறையினர் நடத்திய சோதனையில், மணல் திருட்டில் ஈடுபட்ட அகரம்சிகூர் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் மணல் திருட்டிற்காக அவர் பயன்படுத்திய மாட்டு வண்டியை மணலுடன் சேர்த்து பறிமுதல் செய்தனர்.
வெள்ளாற்று பகுதிகளில் தொடரும் மணல் திருட்டு சம்பவத்தைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.