பெரம்பலூர் மாவட்டம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த தனது மாமனார் ரெங்கராஜ் (70) என்பவரை அழைத்துக் கொண்டு, தனது காரில் பெரம்பலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கு நின்று கொண்டிருந்த புளியமரத்தில் மோதியது.
இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்த் படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதையடுத்து, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆனந்தை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.