தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகனைக் கொன்று விட்டு நாடகமாடிய தந்தை கைது! - மகனைத் தூக்கிலிட்ட தந்தை

பெரம்பலூர்: மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறிய தந்தையிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மகனைக் கொன்று விட்டு நாடகமாடிய தந்தை கைது!
மகனைக் கொன்று விட்டு நாடகமாடிய தந்தை கைது!

By

Published : May 29, 2020, 5:08 PM IST

பெரம்பலூர் மாவட்டம், பாண்டகபாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் இராமசாமி - , சரஸ்வதி. இவர்களுடைய மகன் முத்தையன். முத்தையனின் தந்தையும், தாயும் கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகின்றனர்.

6 மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பிய முத்தையன், தன் தாயோடு வசிக்க முடிவு செய்தார். இது தந்தை ராமசாமிக்கு உவப்பானதாகயில்லை. இதனிடையே முத்தையன் மது அருந்திவிட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்ததாகவும், ராமசாமியின் கையைக் கடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முத்தையன் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் வலுவாக இல்லாத காரணத்தால் காவல் துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து முத்தையனின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில், முத்தையன் பாண்டகபாடி கிராம சடையப்பர் கோயிலில் தூங்குவது வழக்கம் எனவும், நேற்று முன்தினம் சடையப்ப கோயிலில் தூங்கிய முத்தையனை தந்தை ராமசாமி கொன்றதாகவும் தெரிய வந்தது.

இரவில் மகனைக் கொலை செய்துவிட்டு, சடலத்தை மறுநாள் காலையில் தூக்கில் தொங்கவிட்டு ராமசாமி அனைவரிடமும் நாடகமாடியது காவல் துறை விசாரணையில் அம்பலமானது. ராமசாமிக்கு உடந்தையாக இருந்த மற்றொருவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சித்தப்பா என்றும் பாராமல் தலையில் கல்லைப்போட்டுக் கொன்றவர் கைது

ABOUT THE AUTHOR

...view details