தமிழ்நாட்டில் சென்னையில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்த கரோனா வைரஸ், கடந்த சில தினங்களாக பிற மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று(ஆக.1) 20 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 597ஆக அதிகரித்துள்ளது.
பெரம்பலூரில் கரோனாவுக்கு பலியான 82 வயது மூதாட்டி! - corona toll
பெரம்பலூர்: மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த 82 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி, இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.