பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பரவலாக பெய்துவருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலைவரை விட்டு விட்டு பெய்த மழையானது, இரவு முழுவதும் நீடித்தது. பெரும்பாலான ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பெரம்பலூரில் கொட்டித் தீர்த்த மழை! - பெரம்பலூர் நேற்றைய மழை அளவு
பெரம்பலூர்: மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக,நேற்று ஒரே நாளில் 585 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மழை
நேற்றைய மழை அளவு: செட்டிகுளம் - 55 மி.மீ, பாடலூர் - 46. மி.மீ, அகரம் சீகூர் - 90 மி.மீ, லப்பைக்குடிக்காடு - 90 .மி.மீ, புதுவேட்டக்குடி - 51 மி.மீ, பெரம்பலூர் - 48 மி.மீ, எறையூர் - 53. மி.மீ, கிருஷ்ணாபுரம் - 35. மி.மீ, தழு தாழை-36. மி.மீ, வி.களத்தூர் - 30 .மிமீ, வேப்பந்தட்டை - 51.மி.மீ என பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் நேற்று 585 மி.மீ மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.