உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது. இதனிடையே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகியிடம் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்க ரூ.50 லட்சம் நிதி! - Perambalur legislator Thamizhelvan gave Rs. 50 lakh from the Assembly Development Fund
பெரம்பலூர்: கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டு அமைப்பதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்க 50 லட்சம் நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக பணி செய்து வருகின்றனர். இதனிடையே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 120 படுக்கைகளுடன் கூடிய கரோனா வைரஸ் சிறப்பு வார்டு ஏற்படுத்துவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி வழங்குகிறேன்” என்று தெரிவித்தார்.
TAGGED:
corono mla fund