தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.3 லட்சம் பறிமுதல்!

பெரம்பலூர்: இருவேறு இடங்களில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் தலைமையில், வாகன பரிசோதனை நடைபெற்றது. இதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் பறிமுதல்
பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப் பட்டதாக 3 லட்சம் பறிமுதல்

By

Published : Mar 31, 2021, 9:14 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க வாகன பரிசோதனை நடைபெறுகிறது.

இதனிடையே பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா தலைமையில், நிலைக் கண்காணிப்புக்குழுவினர் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.1,00,500 பறிமுதல் செய்யப்பட்டு, பெரம்பலூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட திருமாந்துறைப் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் வட்ட வழங்கல் அலுவலர் திலகவதி தலைமையிலான குழுவினர், தொழுதூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவரிடமிருந்து ரூ.1,99,500 ரொக்கம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்டு, குன்னம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: வாளால் கேக் வெட்டிக் கொண்டாட்டம்: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details