மேஷம்:இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். யாருடைய உதவியோ, செல்வாக்கோ அல்லது பரிந்துரையோ இல்லாமல், உங்கள் தனிப்பட்டத் திறமையால் செய்து முடிப்பீர்கள். நீங்கள் அறிவியல் அல்லது கலை ஆர்வம் மிக்க மாணவராக இருந்தால், உங்கள் ஆழ்ந்த அறிவினால் எதிர்பார்ப்புகளையும் தாண்டி அபார வெற்றி பெறலாம்.
ரிஷபம்: இன்று, மற்றவர்களை ஈர்ப்பதோ கட்டுப்படுத்துவதோ உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். ஏதோ ஒன்றைப் பெற வேண்டும் என்று உங்கள் மனதில் இலக்கு வைத்திருந்தால், அதில் தொடக்கத்தில் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிடும், ஆனால் இறுதியில், நீங்கள் அதை பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஈடுபடும் அனைத்து செயல்களும் நல்ல பலனளிக்கும்.
மிதுனம்: மதம், கலாச்சாரம், மற்றும் அறிவுசார் பணிகளில் நாள் முழுவதும் ஈடுபட்டிருப்பீர்கள். சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அவசியமாக வேண்டும். தொண்டு நிறுவனம் அல்லது அறக்கட்டளை பணிகளுக்காக செலவுகள் செய்வீர்கள். வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ள சிறந்த நாள்.
கடகம்: அசாதாரணமான முறையில் சில புதிய சூழ்நிலைகளைக் கையாள நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கை செய்கிறோம். நாளின் பிற்பகுதியில் பொது உளவியல் தொடர்பான சில படிப்பினைகளை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். எந்த முக்கியமான முடிவையும் எடுப்பதற்குக் முன்னதாக, நடுநிலைமையான மனோநிலையில் நின்று, சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சிம்மம்: உங்கள் மனநிலையை இன்று கவனமாக கையாள வேண்டும். உங்கள் மனநிலையில் பல மாறுதல்கள் ஏற்படலாம். குறிப்பாக காலை நேரத்தில் எரிச்சலூட்டும் மனோநிலை நிலவலாம். இன்று நிறைய விஷயங்களை நீங்கள் கையாள வேண்டியிருக்கலாம். இதனால் பதற்றங்கள் அதிகரிக்கலாம். ஓரிரு நாட்களில் உங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
கன்னி: தயவுசெய்து சிறிய விஷயங்களில் தலையிட வேண்டாம், அது நெருங்கிய உறவுகளை சேதப்படுத்தக்கூடும். நீதிமன்றத்துக்கு வெளியில் சமரசமாக சட்ட விஷயங்கள் முடிவுக்கு வரும். மாலையில், உங்கள் மகிழ்ச்சிக்காக ஓரளவு பணத்தை செலவழிக்கலாம். தாராளமாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.