பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள குவாரியில் மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் சுப்பிரமணி(48). இன்று(ஜூலை.29) காலை குவாரியில் உள்ள பள்ளத்தில் லாரிகளில் லோடு ஏற்றுவதற்காக கீழே இறங்கி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த லாரி டிரைவர் ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார், சுப்பிரமணியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென குவாரியில் பாறை சரிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிக்கொண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அகற்றி சுப்பிரமணி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.