தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றுக்கு இருவர் பலி - இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரம்பலூரில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு இருவர் பலி
பெரம்பலூரில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு இருவர் பலி

By

Published : May 31, 2021, 6:59 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தொடர்ந்து கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றுப் பரவி வருகின்றது. பெரம்பலூரைச் சேர்ந்த பொன்கலியபெருமாள் என்பவர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் நேற்று (மே30) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் அருமடல் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்பவர், கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே குன்னம் பகுதியைச் சேர்ந்த லெனின் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கருப்புப் பூஞ்சை தொற்றால் இருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கருப்பு பூஞ்சை: புதுச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details