பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதியான பழைய பேருந்து நிலையம் கடைவீதி பகுதியில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. பெரம்பலூர் கடைவீதி பகுதியில் இயங்கிவரும் தசரத் சிங் என்பவருக்குச் சொந்தமான 'அம்பிகா டெக்ஸ்டைல்ஸ்' என்ற துணிக்கடையில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேலைகள் மற்றும் ரொக்கப் பணம், 75 ஆயிரம் ரூபாயை சந்தேகத்திற்குரிய நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி, துணிக்கடையின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து, கடையில் இருந்த 15 லட்சம் மதிப்புள்ள சேலைகளைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.