கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை 21 நாள்களுக்கு பிரதமர் மோடி பிறப்பித்திருக்கிறார். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஊரடங்கால் வெறிச்சோடிய பெரம்பலூர் - 144 implement at permbalur
பெரம்பலூர்: நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையடுத்து பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
corona
மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. பேருந்துகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்திற்குள் வரும் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. காவல் துறையினர் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மருத்துவர்கள் தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டாம் - மக்கள் நல்வாழ்வுத் துறை
Last Updated : Mar 25, 2020, 10:49 PM IST