நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேவுள்ள காவேரி நகர் பகுதியில், கடந்த ஒரு வாரமாக மூன்று குரங்குகள் சுற்றித் திரிந்துள்ளன. இதில் இரண்டு குரங்குகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் ஒரு குரங்கு மட்டும் அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் உள்ள உணவுகளை சாப்பிட்டு வசித்து வந்தது.
இந்நிலையில், இன்று ( அக். 3 ) உயரமான கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு தாவ முயன்றபோது குரங்கு எதிர்பாராதவிதமாக மின்சாரக் கம்பியில் சிக்கியது. இதில் வயிற்று பகுதியிலும், இடது கையிலும் பலத்த காயமடைந்து அக்குரங்கு உயிருக்குப் போராடியது.