நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் லட்சுமி தெரு பகுதியை சேர்ந்த கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் சிலர் டிக் டாக் செயலி மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் புல்லட்டில் வரும் இளைஞர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வருவது போலவும், அதனைக்கண்ட பைக்கில் வந்த இளைஞர் தனது வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அதில் ஒருவரை சுட்டுக் கொல்வது போலவும், அதனை கண்ட மற்றவர்கள் தப்பி செல்வதாகவும் அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது.
இதன் மூலம் அந்த இளைஞர்கள் தாங்களை ரவுடிகளாக சித்தரித்து கொள்ளவும், பொது மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் ரசிகர்களான இவர்கள், தங்கள் பெயருக்கு முன்னால் நடிகர் தனுஷின் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயரை சேர்த்துக்கொண்டு மாரி படத்தில் நடிகர் தனுஷ் கடை உரிமையாளர்களை மிரட்டி வசூல் செய்வது போல் இந்த கும்பல் பொதுமக்களை மிரட்டியும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்குவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.