நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அப்பூர்பாளையம், பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும் இவரது மனைவி வாசுகிக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், கூட்டப்பள்ளியிலுள்ள உறவினர் வீட்டில் வாசுகி வசித்துவந்தார். இதையறிந்து நேற்று (ஆகஸ்ட் 11) அங்கு அரிவாளுடன் சென்ற சசிகுமார், தன்னுடன் வரும்படி வாசுகியை மிரட்டியுள்ளார்.
இது குறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் வாசுகி புகார் அளித்தார். இதையடுத்து திருச்செங்கோடு காவல்துறையினர் சசிகுமாரை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், மீண்டும் கூட்டப்பள்ளி சென்ற அவர், தனது மனைவி குன்னூரிலுள்ள தாய் வீட்டிற்குச் சென்ற செய்தியை அறிந்துள்ளார்.