தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்த இளைஞர்; போலீஸ் வலைவீச்சு - namakkal viral video

நாமக்கல்: மோகனூர் பகுதியில் நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Namakkal
Namakkal

By

Published : Jul 19, 2020, 12:30 PM IST

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் நேற்று முன்தினம் (ஜூலை 17) மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து சோழிய முதலி தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் சாலையோரமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, விக்ரம் தனது இருசக்கர வாகனத்தைக் கொண்டு மோதுவதுபோல் சென்றுள்ளார்.

இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், தன் வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து, தட்டிக்கேட்டவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டி, அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அரிவாளுடன் துரத்தியதால் பயந்து நடுங்கி அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனை அங்கிருந்தவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியினர் மோகனூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

நடுரோட்டில் வீச்சருவாளுடன் மிரட்டல் விடுத்த இளைஞர்

தகவலின்பேரில் மோகன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:அரிவாளுடன் ஊருக்குள் வலம்வந்த ரவுடிகள் - வெளியான சிசிடிவி காட்சி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details