தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி - சித்த மருத்துவம்

நாமக்கல்: கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

யோகா பயிற்சி
யோகா பயிற்சி

By

Published : Aug 25, 2020, 3:32 PM IST

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நாமக்கல் நகராட்சியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு, மாவட்ட சித்த மருத்துவத் துறை சார்பில் யோகா, மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நோய் எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இன்று (ஆகஸ்ட் 25) முதல் 160 தூய்மைப் பணியாளர்களுக்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பயிற்சிகள் அளிப்பது தொடங்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி
இதில் சித்த மருத்துவர்கள் டாக்டர் தமிழ்ச்செல்வன், டாக்டர் பூபதிராஜா ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு சித்தர் மூச்சு பயிற்சி, சித்த யோகம், சுயவர்ம பயிற்சி, முத்திரை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தனர். இப்பயிற்சிகள் அளிப்பதன் மூலம் மன அமைதி, உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் அவர்களின் உடல் நலன் மேம்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நாளையும் (ஆகஸ்ட் 26) மீதமுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பொன்னபலம், நகர சுகாதார அலுவலர் சுகவனம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details