மத்திய அரசின் திட்டங்களையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை நடைபெற்று வருகிறது.
இதன், மாநில தலைவர் இப்ராகிம் ராவூத்தர், நாமக்கல்லில் பல்வேறு இடங்களில் மோடி அரசின் சாதனையை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோயில்களுக்குச் சென்று கோயில்களின் வரலாறுகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஹிந்தி திணிப்பு, நீட் உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டங்கள் முனை மழுங்கி போன நிலையில் தற்போது வேளாண் மசோதா, விவசாயிகளுக்கு எதிரானது என்ற கருத்தை கையில் எடுத்து போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
பரப்புரையில் ஈடுபட்ட இப்ராகிம் ராவுத்தர் இது தவறானது, இவர்கள் விவசாயிகளை தூண்டிவிடுகிறார்கள். அரசியல் லாபத்துக்காக இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்கின்றனர். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிரானது பாஜக என திமுகவினர் தவறான பரப்புரை செய்து வருகிறார்கள். இதனை, எங்கள் பரப்புரையின் மூலம் நாங்கள் முறியடிப்போம்” என்றார்.
இதையும் படிங்க:குமரி வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் முருகனுக்கு சிறப்பான வரவேற்பு!