நாமக்கல்லில் உலக செவிலியர் தின கொண்டாட்டம் - mothers day
நாமக்கல்: உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் வாழ்த்துகள் அஹிம்சா தி.ரமேஷ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு காந்தி வேடமிட்டு வாழ்த்துக்கள்
நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் மற்றும் இன்று பிறந்த குழந்தைகளை வாழ்த்தும் விதமாகவும் நாமக்கல்லைச் சார்ந்த அகில இந்திய அஹிம்சா சோசலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர், அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான அஹிம்சா தி.ரமேஷ் வழக்கம்போல் காந்தியடிகள் வேடமணிந்து வந்து, மருத்துவமனையின் பிரசவ வார்டு சென்று, உலக செவிலியர் மற்றும் அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் இன்று ஆண்குழந்தை பிரசிவித்த மணிகண்டன்-சித்திரா தம்பதி க்கு அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து பழங்களை பரிசளித்தார் அஹிம்சா தி.ரமேஷ்.