இருசக்கர வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. அதனொரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ‘No Helmet, No Entry’ என்ற எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டு காவலர்களால் கண்காணிக்கப்படுகிறது.
நோ ஹெல்மட்... நோ என்ட்ரீ... நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் - நாமக்கல் ஆட்சியர் அலுவலகம்
நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, தலைக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
namakkal-collector-office
மேலும் காவலர்கள், ஹெல்மட் அணியாமல்வரும் இருசக்கர வாகனவோட்டிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே விடாமல், அவர்களை ஹெல்மட் அணிந்து வருமாறு அறிவுறுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் தீக்குளிக்க முயற்சி!