தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவனை கொன்றுவிட்டு பலே நாடகம்.. முறையற்ற உறவால் விபரீதம்.. பலே பெண் சிக்கியது எப்படி? - wife killed husband and acted like accident

Namakkal Illegal Relationship Murder: நாமக்கல்லில் திருமணமத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை கண்டித்த கணவரை, காதலன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் அருகே திருமணம் மீறிய உறவை கண்டித்த கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
நாமக்கல் அருகே திருமணம் மீறிய உறவை கண்டித்த கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 2:47 PM IST

Updated : Aug 29, 2023, 3:05 PM IST

நாமக்கல்:மோகனூர் அடுத்த செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான பெரியசாமி (37). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி நள்ளிரவில் தனக்கு கடுமையான காது வலி என பிரேமா கூறியதால் அவரை மோகனூர் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது செல்லிபாளையம் அருகே ஒரு வளைவில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் பெரியசாமி பலத்த காயமடைந்ததாகவும், தனக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக செல்போன் மூலம் பிரேமா தனது உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.

நிகழ்விடத்திற்கு சென்று சாலையில் கிடந்த பெரியசாமியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரியசாமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அன்று மாலையே பெரியசாமியின் உடல் நாமக்கல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து பிரேமா அளித்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் விபத்து என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேமாவின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினர். அப்போது தான், பிரேமா மோகனூர் பகுதியில் உள்ள பேக்கரியில் பணியாற்றிய போது அங்கு உடன் பணிபுரிந்த நந்திகேசவனுடன் (27) திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பேக்கரி உரிமையாளரிடம் பெரியசாமியின் உறவினர்கள் விசாரணை செய்ததில் இருவரது திருமணம் மீறிய உறவு விவகாரம் தனக்கு தெரிய வந்ததும் உடனடியாக இருவரையும் பணியில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, பெரியசாமியின் இறப்பில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் போலீசார் விபத்து நடந்த இரவு என்ன நடந்தது என பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

போலீசார் மற்றும் உறவினர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பிரேமா, "தானும், பர்க்கூர் பகுதியை சேர்ந்த நந்திகேசவன்(27) என்ற இளைஞரும் கடந்த சில மாதங்களாகவே நெருக்கமாக பழகி வந்ததை ஒப்புக்கொண்டதோடு, இருவரும் சந்திக்க முடியாத சூழலில் ஆத்திரமடைந்து கணவர் பெரியசாமியை தீத்துக் கட்ட முடிவு செய்ததாகவும், சம்பவத்தன்று தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கணவர் பெரியசாமியுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காதலன் நந்திகேசவன் மற்றும் அவரது நண்பர் தனுஷ் ஆகியோர் காரில் வந்து செல்லிபாளையம் தரைப்பாலம் அருகே வழிமறித்து கணவர் பெரியசாமியை கடப்பாரையால் அடித்து கொலை செய்து விட்டு விபத்து போல் நாடகமாடியதாக ஒட்புக் கொண்டுள்ளார்" போலீசார் கூறியுள்ளனர்.

பின்னர், பிரேமாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த நந்திகேசவனை தருமபுரியிலும், அவரது நண்பர் தனுஷை அரக்கோணத்திலும் கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை காதலனுடன் தீர்த்து கட்டத் திட்டம்.. பள்ளி மாணவியிடம் போலீசார் விசாரணை!

Last Updated : Aug 29, 2023, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details