தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் ஊருக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி - மழை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

namakkal  namakkla rain  namakkal heavy rain  heavy rain  கனமழையால் ஊருக்குள் புகுந்த மழை நீர்  ஊருக்குள் புகுந்த மழை நீர்  நாமக்கலில் கனமழை  மழை  கனமழை
ஊருக்குள் புகுந்த மழை நீர்

By

Published : Oct 1, 2021, 1:54 PM IST

Updated : Oct 1, 2021, 4:48 PM IST

நாமக்கல்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாமக்கலில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அதன்படி, நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (செப்.30) நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் இன்று (அக்டோபர் 1) அதிகாலை சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்து. இதனால் சூரியம்பாளையம், கூட்டப்பள்ளி ஆகிய பகுதிகளின் வழியாக ஏரிக்கு செல்லும் மழைநீர், ஊருக்குள் புகுந்தது.

ஊருக்குள் புகுந்த மழை நீர்

ஊருக்குள் புகுந்த நீர்

இதில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியிலுள்ளனர். இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சண்முகம் மற்றும் வருவாய்துறையினர், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, நீர்வழி பாதைகளில் மரம் மற்றும் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் ஏரிக்கு செல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியதாகவும், தற்போது ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நீர் வழிப்பாதையை சரி செய்து மழைநீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் துறையினர் தெரிவித்தனர். அந்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பேருந்து நிலையம், குடியுருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சேலத்திலிருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு செல்லும் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 505 வாக்குறுதிகளில் 202-ஐ நிறைவேற்றிவிட்டோம்- மு.க. ஸ்டாலின்

Last Updated : Oct 1, 2021, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details