தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டி! - தேர்தல் செய்திகள்

நாமக்கல்: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்வதற்கு பொதுமக்களை வலியுறுத்தும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைப்பெற்றது. இதில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

election awareness
நாமக்கலில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மினி மாரத்தான் போட்டி

By

Published : Mar 7, 2021, 3:50 PM IST

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் இணைந்து, நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு செய்வதற்க்காக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைப்பெற்றது.

லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு, ஒட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.

நாமக்கலில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மினி மாரத்தான் போட்டி

இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவ மாணவியர் என 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போட்டிகளில் ஆண்களுக்கான மினி மாரத்தான் பந்தயத்தில் இராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் அரவிந்த் என்ற மாணவரும், பெண்களுக்கான மினி மராத்தானில் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த கிருத்திகா என்ற மாணவியும் முதலிடம் பிடித்தனர்.

இதையும் படிங்க: 'மதம் இல்லை; சாமி இல்லை; நீங்கள் தான் எனக்கு சாமி' கமல்ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details