தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 சதவீத வாக்குப்பதிவு: நாமக்கல்லில் விழிப்புணர்வு!

நாமக்கல்: நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

வாக்குப்பதிவு விழிப்புணர்வு
வாக்குப்பதிவு விழிப்புணர்வு

By

Published : Mar 9, 2021, 12:26 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அனைத்து மாவட்டத்திலும் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி என பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

100 சதவீத வாக்குப்பதிவு: நாமக்கல்லில் விழிப்புணர்வு!

இந்நிலையில் இன்று (மார்ச் 9) நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை நாமக்கல் கோட்டாட்சியர் கோட்டைக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

100 சதவீத வாக்குப்பதிவு: நாமக்கல்லில் விழிப்புணர்வு!

இந்த விழிப்புணர்வு பேரணியில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யவேண்டும். எனது வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் நகரின் முக்கிய சாலைகளில் பேரணியாக சென்றனர்.

இதையும் படிங்க...கமல் தலைமையில் உருவானது மூன்றாவது அணி!

ABOUT THE AUTHOR

...view details