நாமக்கல்:ஆஞ்சநேயர் கோயிலில் சசிகலா இன்று(ஏப்.11) சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ''உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்ற ஒற்றை வரி பதிலை மட்டுமே தெரிவித்தார்.