தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

#BigilFDFS இலவு காத்த கிளியான... தளபதி ரசிகர்கள் - பிகில் பட டிக்கெட்களுக்காக காத்திருந்த ரசிகர்கள்

நாமக்கல்: காவல்துறையினர் அறிவுறுத்தியும், பிகில் படமே திரையிடாத திரையரங்கில் குவிந்த விஜய் ரசிகர்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

#BigilFDFS இலவு காத்த கிளியான.... தளபதி ரசிகர்கள்

By

Published : Oct 25, 2019, 2:33 AM IST

விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இதையொட்டி, நாமக்கல்லில் எல்.எம்.ஆர்.மல்டிபிளக்ஸ் என்ற திரையரங்கில் மட்டுமே பிகில் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சேலம் சாலையில் உள்ள கே.எஸ். திரையரங்கத்தில் பிகில் படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் 300க்கும் மேற்பட்டோர் தங்களது வாகனங்களை திரையரங்கின் முன்பும் சாலையிலும் நிறுத்திவிட்டு திரையரங்கு வாசலிலேயே காத்து கிடந்தனர்.

நாமக்கலில் அலப்பறை செய்த விஜய் ரசிகர்கள்

தொடர்ந்து ரசிகர்கள் பிகில் படம் டிக்கெட்டுகளை வாங்க குவிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பிகில் திரைப்படம் அந்த திரையரங்கில் திரையிட ஒப்பந்தம் பெறாத நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கத்தில் காத்துக்கிடப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கிருந்த ரசிகர்களை களைந்து செல்லுமாறும் வாகனங்களை அகற்றியும் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இது குறித்து ரசிகர்கள் கூறுகையில், "திரையரங்குகளில் விரைவில் பிகில் திரைப்படம் திரையிட அனுமதி கிடைக்கும் எனவும், இதனால் தற்போது இருந்து பிகில் திரைப்படத்தின் டிக்கெட்டுகளை வாங்க காத்துக்கிடப்பதாகவும் தெரிவித்தனர்."

இதையும் படியுங்க:

#BigilVijay விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை நீங்களே பாருங்க..!

ABOUT THE AUTHOR

...view details