தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதி வெட்டிக் கொலை - நள்ளிரவில் பரபரப்பு - நாமக்கல் காவல் துறையினர் விசாரணை

நாமக்கல்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதியினரை வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தம்பதி வெட்டிக் கொலை

By

Published : Oct 15, 2019, 9:25 AM IST

நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். பழ வியாபாரியான இவரும், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை காதலித்து கடந்த ஒராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தைப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால், அதேபகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்களது ஆறுமாத குழந்தையுடன் வசித்துவந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு தம்பதி இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆறு பேர் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதைத் தடுக்க வந்த அனிதாவின் தந்தை கருப்புசாமியையும் அவர்கள் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருப்பசாமி

அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயமடைந்த கருப்புசாமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அனிதாவின் அண்ணன் அருணுக்கும், சேலத்தைச் சேர்ந்த நிக்கல்சன் என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளதும், அதில் கடந்த சில நாட்களாக நிக்கல்சன் ஆட்கள் அடிக்கடி அருணை தேடி காமராஜர் நகர் வந்த நிலையில் இன்று அருணின் சகோதரி அனிதா குடும்பத்தைக் கொலை செய்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஒருதலைக்காதல்: மாணவியை தீயிட்டு கொளுத்தி கொன்று தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details